மீன் விலையில் வீழ்ச்சி!

மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் இதனால் சந்தையில் ஜீலா, நெத்தலி போன்ற சில வகை மீன்களின் விலையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சில மீன் வகைகளின் விலை கிலோ 100 ரூபா அளவில் குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், கடற்றொழில் அமைச்சு மற்றும் பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலைய மீன் வியாபாரிகள் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
அதன்படி, மீன் விலையை நிலையாகப் பேணும் விதமாக கொப்பரா மற்றும் தலபத் போன்ற மீன் வகைகள் தவிர்ந்த மற்ற மீன் வகைகளின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சினால், பொருளாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரின் மீன் இறக்குமதியையும் தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண அதிகரிப்பு!
புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு - அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையு...
10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் - விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் ப...
|
|