நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண அதிகரிப்பு!

Wednesday, May 25th, 2022

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண திருத்தம் இன்றுமுதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாகவும் அதிகபட்ச சாதாரண பேருந்து கட்டணம் 2,022 ரூபாயில் இருந்து 2,417 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை மற்றும் சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கட்டணம் 1,210 ரூபாவாகும். கடவத்தையில் இருந்து காலிக்கு 1,000 ரூபாயும் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிக்கு 1,680 ரூபாயும் கொழும்பில் இருந்து வீரகெட்டியவிற்கு 1,550 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மொனராகலை அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் 2,420 ரூபாயாகும். அதேவேளை, மகும்புரவிலிருந்து அக்கரைப்பற்றுக்கான கட்டணம் 3,100 ரூபாவாகும்.

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து கட்டண திருத்தத்தின் பிரகாரம், கொழும்பில் இருந்து கண்டிக்கு 457 ரூபாயும், கொழும்பில் இருந்து மாத்தறைக்கு 583 ரூபாயும், கொழும்பில் இருந்து காலிக்கு 437 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: