மீன்பிடித்துறை அமைச்சின் ஒரு தொகுதி அதிகாரங்கள் இராஜாங்க அமைச்சரிடம் செல்கின்றது!
Saturday, April 2nd, 2016
மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர, தமது அதிகாரங்களில் ஒரு தொகுதியை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரமளவில் அமுலுக்கு வரும் வகையில் நன்னீர் மீன்வளர்ப்பு முதலீட்டு ஊக்குவிப்பு, கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மீனவர் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பணிகள் இராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
எவ்வாறான அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் எழுத்து மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் பகிரங்கமாக விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் - அரசாங்கம் தீர்மானம்!
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாம!
|
|
|


