மீன்பிடித்துறை அமைச்சின் ஒரு தொகுதி அதிகாரங்கள் இராஜாங்க அமைச்சரிடம் செல்கின்றது!
 Saturday, April 2nd, 2016
        
                    Saturday, April 2nd, 2016
            மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர, தமது அதிகாரங்களில் ஒரு தொகுதியை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரமளவில் அமுலுக்கு வரும் வகையில் நன்னீர் மீன்வளர்ப்பு முதலீட்டு ஊக்குவிப்பு, கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மீனவர் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பணிகள் இராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
எவ்வாறான அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் எழுத்து மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் பகிரங்கமாக விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேரந்துகளுக்கு தண்டப் பணம் அதிகரிப்பு!
ஜப்பான் பாதுகாப்பு தலைவர் - ஜனாதிபதி சந்திப்பு  !
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை -  நீதி அம...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        