மீனவர்கள் அத்துமீறும் போது, அவர்களை கடற்படையினர் கைது செய்வார்களே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டார்கள் – பிரதமர்!

Tuesday, March 14th, 2017

பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 6ம் நாள் இரவு கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, உடனடியாக இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே, இலங்கை எல்லைக்குள் மீனவர்கள் அத்துமீறும் போது, அவர்களை கடற்படையினர் கைது செய்வார்களே தவிர, துப்பாக்கிச் சூடு நடத்தமாட்டார்கள் என்று பிரதமர் ரணில் நியாயப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படை நடத்தும விசாரணைகளுக்குச் சமாந்தரமாக, இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சும் தனியான விசாரணையை நடத்தும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை பிரதமரின் இந்தப் பதிலை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியா உன்னிப்பாக அவதானிக்கும் என்று இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts: