மீண்டும் வாள்வெட்டு: தடுக்க விசேட பொலிஸ் குழு!

மீண்டும் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்வதற்கான விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
சங்குவேலியில் குடும்பஸ்தர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தகவல் தந்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை சங்குவேலி வடக்கு பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் சிவகுமாரன் பிரணவன் (வயது 34) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை கொலை செய்யப்பட்டிருந்தார்.
இவ் வாள்வெட்டுச் சம்பவத்தினை ஏற்படுத்திய பிரான 3 சந்தேக நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உயிரிளந்தவர்களின் உறவினர்களால் பொலிஸாரிடத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாடு தொடர்பான பொலிஸாருடைய நடவடிக்கைகள் தொடர்பில் அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சுங்குவேலயில் இட்ம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிளந்தமை தொடர்பாக முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளும் மேன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த கொலை சம்பவம் உட்பட யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இவ்வாறான சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக் கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்திக் கொள்ளும் வகையில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அப் பொலிஸ் குழு புலனாய்வு ரீதியில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|