மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
Thursday, July 6th, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரதிநிதிகள் சிலர் நேற்று, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினர். அந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய இதனை குறிப்பிட்டார்.
தற்போது டெங்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு போராட்டதை கைவிடுமாறும், இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்ததாக அனுருத்த பாதொனிய குறிப்பிட்டார்.
Related posts:
ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞானமாணி பட்டப்படிப்புக்கு மானியங்கள் ஆணைக்குழு அங்கீகார...
ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் - நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவ...
|
|
|


