மாற்று வழி வேண்டுமென்று கோரிக்கை!
Wednesday, April 4th, 2018
திடீரென உயிரிழந்தவர்களின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உரித்துடையவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இதில் குடும்பத் தலைவன் உயிரிழப்பின் மனைவியிடம் கையளிக்குமாறு பணிக்கப்படுகிறது. கைக்குழந்தையுடன் உள்ள தாய்மார்கள் இந்த விடயத்தில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் நெருங்கிய உரித்துடைய உறவினர் ஒருவரிடம் சடலத்தை ஒப்படைக்கலாமா என்று பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.
அண்மையில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அண்மித்த முதன்மைச் சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவருக்கு நான்கு மாதக் கைக்குழந்தையும் மறுநாள் கேரதீவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவருக்கு ஐந்து மாதக் கைக்குழந்தையும் இருந்துள்ளன.
இறப்பு விசாரணைக்கு அவர்கள் செல்வதைத் தவிர்க்க முடியாது.
ஆனால் இறப்பு நிறைவடைந்த பின்னர் சடலத்தைப் பொறுப்பேற்கும் வரை மனைவி மருத்துவமனையில் காத்திருக்க வேண்டுமா என்று கேட்கப்பட்டது. உடற்கூற்றுப் பரிசோதனை முடியும்வரை காத்திருக்க வேண்டிய நிலை மனைவிக்கு ஏற்படுகிறது.
இறப்பு விசாரணை நிறைவடைந்த பின்னரும் சடலத்தைக் கட்டாயம் மனைவிதான் பொறுப்பேற்க வேண்டுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
Related posts:
|
|
|


