மானிப்பாயில் 12 வீதிகள் அடுத்தாண்டு காப்பெற்றாகும்!
 Thursday, December 15th, 2016
        
                    Thursday, December 15th, 2016
            வலி.தென்மெற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் காப்பெற் வீதியாக சீரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குழாய் – கல்வளை வீதி, பிரான்பற்று – பண்டத்தரிப்பு வீதி, அல்லுண்ணி வீதி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி – கம்மாவை வீதி, 1ஆம் 2ஆம் கயா வீதி, நவாலி தெற்கு ராஜராஜேஸ்வரி வீதி, மலைவேம்படி வீதி, சவாரி வீதி, மதவடி வீதி, செட்டியடைப்பு வீதி, சண்டிலிப்பாய் 5 கண்மதவடி வீதி, நாவாலி வடக்கு தலுவில் வீதி என்பனவே சீரமைக்கப்படவுள்ளன. வீதிகளின் சீரமைப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளரின் மேற்பார்வையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:
உலக நாடுகள் வரிசையில்  முன்னிலையில் இலங்கை  -  அவ வேள்ட் இன் டேட்டா என்ற இணையத்தளம் தெரிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந...
வட்டி விகிதத்தையும் மாற்று விகிதத்தையும் கட்டுப்படுத்தாமல் ஒரே மதிப்பில் வைத்திருந்தமையே நாடு வங்குர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        