மாதாந்தம் 75000 ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் செயற்றிட்டம்!
Wednesday, September 21st, 2016
ஒருவருக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் சுயதொழில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வருடங்களை நோக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 750 மில்லியன் அன்னாசி கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இதன்மூலம் 7.5 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:
மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு!
இந்தியா நிதியுதவி - நவம்பர்முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை - அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று சம...
வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர...
|
|
|


