மாணவர்களின் உள ஆரோக்கியம் தொடர்பில் கல்விச் சமூகம் அக்கறை கொள்ளவேண்டும் – யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
Saturday, November 19th, 2016
மாணவகள் விளையாட்டு மைதானங்களில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களைக் கணனி விளையாட்டுக்களில் செலவிடுகிறார்கள். இந்த நிலமையை நாமனைவரும் இணைந்து மாற்ற வேண்டும் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்
யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் மத்தியில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நீரிழிவு தினமான கடந்த திங்கட்கிழமை விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடாத்தின. விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடர்ந்து யாழ்.வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு விருந்நினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோய் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மருத்துவ உலகில் நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் மனிதனுடைய ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. எங்களுடைய வாழ்நாட்காலம் நீடித்தாலும் நாம் வாழும் காலப் பகுதியில் ஆரோக்கியமாக வாழ்கிறோமா? என்பது கேள்விக்குறியே. நாங்கள் மருந்துகளை உண்டும், மற்றவர்களில் தங்கி வாழ்ந்தும் எமது வாழ்நாட்களைக் கழிப்பதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. நீரிழிவு சோயின் தாக்கத்திற்கு எமது தவறான உணவுப் பழக்க வழக்கங்களும், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறையும் பிரதான காரணங்கள் ஆகும். மூத்தோர்களுக்கு நடைப்பயிற்சி, தேகப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

Related posts:
மீன்குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - நன்னீர் மீன்பிடி சங்கங்கள்!
அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க இடமளிக்காதீர் - வர்த்தக அமைச்சர் பந்துல ...
பிராணவாயுவை எடுத்துவர சென்னை நோக்கி பயணமானது சக்தி!
|
|
|
393 கடற்படை சிப்பாய்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு - இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவிப்பு!
கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது - அமைச்...


