மாங்காய் வியாபாரியாக நடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் சிக்கினார்!
Monday, June 13th, 2016
மாங்காய் வியாபாரி போல் நடித்துக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை(11-06-2016) யாழ். கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் யாழ். கோட்டைப் பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் நடத்தினர். இதன் போது சைக்கிள் கைப்பிடிக்குள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. சந்தேகநபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு கைதானவர் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
போலி நாணயத்தாள் மோசடி-பின்னணியில் இருந்ததாக பெண் உட்பட மூவர் கைது!
காலாவதியான மருந்துகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!
தொடருந்தில் மரக்கறிகள் - பழங்களை - விரிவான அறிக்கை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்...
|
|
|


