மழையுடன் கூடிய காலநிலை நாளைமுதல் அதிகரிக்கும்!
Thursday, November 17th, 2016
நாட்டின் தென் பாதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர், மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில், குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். மேற்கு. சப்ரகமுவ, தென் மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

Related posts:
மீதொட்டுமுல்லை குப்பைமேடு - உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு!
ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் - அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொ...
|
|
|


