மல்லாகம் பகுதியில் தற்கொலை எண்ணத்துடன் தண்டவாளத்தில் நின்ற நபரைக் காப்பாற்றிய ரயில் சாரதி
Tuesday, March 15th, 2016
தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தண்டவாளத்தில் நின்ற நபரொருவரை ரயிலை நிறுத்தி அவ்விடத்திலிருந்து அகற்றிய ரயில் சாரதி தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி எச்சரித்த சம்பவம் நேற்று முன்தினம் (13) மல்லாகம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –
நேற்று முன்தினம் பிற்பகல்-03.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது மல்லாகம் – தெல்லிப்பழை புகையிரத நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது மேற்படி பகுதியில் நபரொருவர் தற்கொலை செய்யும் நோக்குடன் தண்டவாளத்தில் நின்றதை அவதானித்த ரயில் சாரதி ரயிலை நிறுத்தி தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றி எச்சரித்ததுடன் அந் நபரை அவ்விடத்திலிருந்து அகற்றியுமுள்ளார்.
குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிய வருகிறது.
Related posts:
|
|
|


