மலேரியா தலைதூக்குவதை தடுக்க நடவடிக்கை –  அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Wednesday, April 26th, 2017

இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 2009ம் ஆண்டு முதல் மலேரியா ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து 2016ம் ஆண்டில் மலேரியா ஒழிப்புக்கான சான்றிதழை இலங்கை பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆசிய பிராந்தியம் உட்பட 91 நாடுகளில் தொடர்ந்தும் மலேரியா நோய் காணப்படுகிறது. உலகிலிருந்து 2030ம் ஆண்டளவில் மலேரியாவை முற்றாக ஒழிப்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலக்காகும். சுற்றுலா, மாணிக்ககல் அகழ்வு போன்றவற்றினால் மீண்டும் இலங்கையில் மலேரியா தலைதூக்கும் அபாயம் காணப்படுகிறது. மலேரியா தலைதூக்குவதை தடுக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

மலேரியா ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கி அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. மலேரியா உட்பட வைரஸ், டெங்கு போன்ற நோய்களை தடுக்கவும் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்

Related posts: