மருந்து விசிறப்பட்டதால் 4,000 மாம்பழங்கள் சந்தையில் பறிமுதல் !

Saturday, November 5th, 2016

கொடிகாமம் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட 4ஆயிரத்துக்கு மேற்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

குறித்த சம்பவம் நேற்றுக்காலை கொடிகாமம் சந்தையில் இடம்பெற்றது. மருந்து விசிறப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வதால் தமது உடல் நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதென கந்தசஷ்டி விரததாரர்கள் கொடிகாமம் பிரிவுப் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் பகல் கொடிகாமம் சந்தைக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் சந்தையில் பழ வியாபாரிகளசை; சந்தித்து பாதுகாப்பற்ற முறையில் மருந்து விசிறப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்ய வேண்டாமெனவும், அவ்வாறான பழங்கள் கொண்டுவரப்படின் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் சாவகச்சேரி பிரதேச சபையின் அலுவலர்களுடன் சந்தையில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டபோது, அங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட 10 பேரின் மாம்பழங்களைப் பரிசோதனை செய்தபோது அவை நேரடியாக மருந்து விசிறப்பட்டு பழுக்க வைத்த பழங்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து மாம்பழங்கள் கொண்டு வந்த 10 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தச் சுகாதாரப் பிரிவினர் ஏற்பாடுகள் மேற்கொண்டவேளை, அவர்கள் அனைவரும் மன்னிப்புக்கோரி இனிமேல் இவ்வாறு செய்யமாட்டோமென வாக்குறுதி அளித்ததால் அவர்களால் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட 4ஆயிரத்துக்கு மேற்பட்ட மாம்பழங்கள் அங்கேயே வெட்டி புதைத்து அழிக்கப்பட்டன.

ht354

Related posts: