மருத்துவத்துக்கும், நெருங்கிய உறவுகளின் இறுதி சடங்கிற்காக மாகாண எல்லையை கடக்கமுடியும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவிப்பு!
Sunday, July 11th, 2021
மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை தொடரும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளுக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் மருத்துவ காரணங்களுக்காகவும், நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவும் மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனது செயற்பாட்டைக் கண்டித்தார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா.....
கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க சர்வதேச அமைப்புகள் ஆதரவு - மின்சார சபையில் மேற்கொள்ளக்கூடிய மறுசீரம...
|
|
|


