மருதானை பொலிஸ் நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!
Friday, July 16th, 2021
மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின் ஒழுக்கு காரணமாக இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி அலுவலகம் !
இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
|
|
|


