மரக்கறிச் செய்கைகளில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபாடு!

யாழ்.குடாநாட்டின் விவசாயிகள் மரக்கறிச் செய்கையில் கூடுதலான ஆர்வத்துடன் ஈடுபடுவதால் எதிர்காலத்தில் அவற்றின் விலை குறைவடையுமென தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய காலநிலையை பயன்படுத்தி அனேகமான விவசாயிகள் இந்த மரக்கறி உற்பத்தி செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மரக்கறி வகைகள் கூடுதலாக அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்து சேர்வதால் அதன் விலைகளில் தளம்பல் ஏற்பட்டுள்ளன.
கத்தரி, கோவா, வெண்டி, பயிற்றை, பாகல், பூசணி, கரட், லீக்ஸ், பச்சை மிளகாய், பீற்றூட், வெங்காயம் போன்றவற்றின் விலைகள் சடுதியாக சரிந்துள்ளன. அடுத்துவரும் நாட்களில் இதன் விலைகள் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம் மரக்கறி வகையின் உற்பத்தியால் தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரக்கறி வகைகளிலும் இவ்வாரம் மிக குறைக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|