மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் – மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவிப்பு!
Wednesday, August 25th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எந்த ஒரு அரச சலுகையும் பெறாத 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“கொரோனா தொற்று காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான 10 நாட்கள் நாட்டில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்க நிலையால் பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் தொழில் வாய்ப்புகளை இழந்த வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றன.
இந்த 2 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுநீரக நோயாளிகள், வயோதிபர் கொடுப்பனவு, ஓய்வூதியக் கொடுப்பனவு, சமுர்த்தி போன்ற எந்த ஒரு கொடுப்பனவையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 8 ஆயிரத்து 700 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|
|


