புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் சேதமாக்கப்படுவது கவலையளிக்கிறது – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்!

Friday, February 19th, 2021

நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள், புதையல் தோண்டுபவர்களினாலோ அல்லது வேறு நபர்களினாலோ சேதமாக்கப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும் எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பொருட்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னர், நாட்டிலுள்ள தொல்பொருள் பெருமதிவாய்ந்த பொருட்களையும், இடங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: