மன்னாரில் 424 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை!

Friday, April 27th, 2018

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு 978 பட்டதாரிகள் அழைக்கப்பட்டபோதும் 554 பட்டதாரிகள் மட்டுமே நேர்முகத் தேர்வில் தோற்றினர் என்று மாவட்டச் செயலக அதிகாரி தெரிவித்தார்.

20 ஆயிரம் பட்டதாரிகளிற்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நோக்கில் மாவட்டச் செயலகங்களில் நேர்முகத் தேர்வு இடம்பெறுகிறது. மன்னார் மாவட்டத்தில் 978 பட்டதாரிகள் உள்ளனர் என்று கண்டறியப்பட்டு அனைவருக்கும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. 554 பட்டதாரிகள் மட்டும் தோற்றியுள்ளனர். 424 பட்டதாரிகள் தேர்வுக்குத் தோற்றவில்லை. தோற்றிய பட்டதாரிகளில் 121 பேர் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டதாரிகள். 32 பட்டதாரிகளிடம் சான்றிதழ் இருக்கவில்லை.

கோரப்பட்ட தகமைகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளாக 380 பேரே இனம்காணப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: