மத்திய வங்கி ஆளுநர் பிரச்சினையில் இணக்கப்பாடு!
Sunday, June 19th, 2016
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் எழுந்த நெருக்கடியான நிலைமை இணக்கத்திற்கு வரும் சூழல் உருவாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தவும் அதுவரை அவருக்கு விடுமுறை வழங்கவும் விசாரணை முடியும் வரை பதில் ஆளுநர் ஒருவரை நியமிக்கப்படவள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. .
நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தின் கீழ் நடத்தப்படும் விசாரணைகளில் அர்ஜூன் மகேந்திரன் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவரது பதவிக்காலத்தை நீடிப்பது நியாயமானது என்பதை சிவில் அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு!
உலக உழைப்பாளர் தினம் இன்று!
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட...
|
|
|


