மது போதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு அபராதம்
Friday, March 25th, 2016
மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரம், வருமான வரிப் பத்திரம் , காப்புறுதிப் பத்திரம் எதுவுமின்றி வாகனம் செலுத்திய குற்றச் சாட்டில் கைதான சாரதிகள் இருவருக்கு 35 ஆயிரம் ரூபா விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ. யூட்சன் நேற்றுப் முன்தினம்(23) தீர்ப்பளித்தார்.
இதன் படி மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரம் , வருமான வரிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம் எதுவுமின்றி மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய குற்றத்திற்காகச் சாரதியொருவருக்கு 23 ஆயிரம் ரூபா அபராதமும், சாரதி அனுமதிப் பத்திரம் எதுவுமின்றி மது போதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய மற்றொரு சாரதிக்கு 12 ஆயிரம் ரூபாவையும் அபராதமாக விதித்தார்.
Related posts:
நிதியமைச்சருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை க...
உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபத்து மூவாயிரத்து தொழாயிரத்து பதின்மூன்று பதின்மூன்று விண்ண...
ஈ.பி.டி.பி. கட்சியின் கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக..
|
|
|


