மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட மூவருக்கு 200 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தக் கட்டளை!
        
                    Wednesday, September 7th, 2016
            
மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட மூவரை 200 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தக் கட்டளைக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். நகரை அண்டிய பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(04) இரவு நேரம் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துள்ளனர். இளைஞர்களின் அநாகரிகமான செயற்பாட்டை நோட்டமிட்ட யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சி. சதீஸ்தரன் சந்தேகநபர்கள் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts:
கடந்த இருவருடத்தில் 2658 Kg போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது –அமைச்சர் சாகல ரத்னாயக்க!
கொரேனானா தொற்று - மேலும் 15 பேர் பலி!
இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்ட...
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

