மதுபோதையில் ரகளை செய்த நபருக்கு 6 வருடங்கள் சிறை : சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு!
Saturday, March 4th, 2017
மதுபோதையில் உறவினர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக சாவகச்சேரி நீதிவான் திருமதி சிறிநிதி நற்தநேகரன் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது.
மிருசுவில் கடந்த மாதம் உறவினர் ஒருவரது வீட்டுக்கு மதுபோதையில் சென்ற நபர் அங்கிருந்தவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசியமையுடன் அந்த வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக வீட்டு உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த வழங்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அந்த சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து 6 வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Related posts:
வடக்கு - கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களே இலங்கையில் வறுமையில் முன்னிலை!
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கௌரவ பிரதமர் முன்னிலை...
20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு - மூன்று வருடங்களுக்கு வழங்க திட்டம் என நிதி இராஜாங்க...
|
|
|


