மண்டைதீவில் கடலட்டை பிடித்தவர்கள் கைது!
Wednesday, July 20th, 2016
அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடித்த 15 மீனவர்களை, நேற்று செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து 104 கடலட்டைகள், சுழியோடுவதற்கு பயன்படுத்தப்படும் முகமூடிகள், சப்பாத்துக்கள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள், பாசையூர் மற்றும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Related posts:
மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது - மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
யாழ்.நகர்ப் பகுதியிலுள்ள உரிய சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வர்த்தகர்கள் கோரிக்கை!
பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சி...
|
|
|


