மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு!

மழையுடன் காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது
சப்ரகமுவ , மத்திய, வடக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மழை பெய்யக் கூடும் என இடர் முகாமைத்துவ நிலைத்தியத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மழையுடனான வானிலை நிலவும் சந்தர்பங்களில் ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சப்ரகமுவ , மேல் , மத்திய, வட மேல் , வட மாகாணங்களைச் சேர்நத மக்கள் மழையுடனான வானிலை நிலவுகின்ற போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலைத்தியத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு!
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அறிக்கை வழங்குமாறு போக்குவரத்து அமைச...
அரச பேருந்துகளில் கட்டணம் செலுத்த QR முறைமை - இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவர...
|
|