மட்டுவில் பகுதியில் அடுப்பு வெடித்து இருவர் காயம்!
Thursday, October 6th, 2016
மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்றவைத்தபோது அது திடிரென வெடித்ததில் பெண்ணொருவரும், அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது சகோதரனும் எரி காயங்களுக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை மட்டுவில் தெற்கில் நடந்துள்ளது.
எரிவாயு அடுப்புக்குப் பக்கத்தில் இருந்த மண்ணெண்ணெய் அடுப்பைத் துப்பரவாக்கித் திரியிட்டு பற்ற வைத்தபோது அது வெடித்துள்ளது. கிரிற்ரி அன்ரனி கிருஸ்ணகுமாரி (வயது – 44), சிவராசா உமாகரன் (வயது-26) ஆகியோரே காயமடைந்தனர். அதேவேளை, வளவுக்குள் குப்பையைத் தீயிட்டு எரித்த பின்னர் அதன்மீது தண்ணீர் ஊற்றச் சென்ற மூதாட்டி கால் தடுக்கி நீர் ஊற்றிய தீக்குள் விழுந்தார். முகம், நெச்சுப்பகுதியில் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார். நாகலிங்கம் மனோன்மணி (வயது-74) என்பவரே காயமடைந்தார்.

Related posts:
நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை!
ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் - மக்களிடம் ...
நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்த 683 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் வழங்கப்பட்டுள்ளது!
|
|
|


