மட்டக்களப்பில் 5 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நாசம்..!!

Thursday, December 22nd, 2016

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிரான்குளம் பிரதேசத்தில் கட்டாக்காலிகளின் அட்டகாசம் காரணமாக 5 ஏக்கர் செய்கை பண்ணப்பட்ட பெரும் போக செற்செய்கை நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் செய்கை பண்ணப்பட்ட நெற்காணிக்குள் நுழைந்த பெருமளவிலான மாடுகள் குறித்த நெற்காணியில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையையே உண்டு அழித்து நாகமாக்கியுள்ளன. குறித்த மாடுகளை வயல் உரிமையாளர்கள் கைப்பற்றி கட்டி வைத்துள்ளனர். காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் கட்டாக்கலிகளின் அட்டகாசத்தால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

662529801Vee

Related posts: