மக்கள் மீது எரிபொருட்களுக்கான வரி திணிக்கப்படமாட்டாது!
Thursday, July 14th, 2016
எரிபொருள் வரிச் சுமை மக்கள் மீது சுமத்தப்படாது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியிருந்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
எரிபொருளுக்காக அறவீடு செய்யப்படும் வரிகள் மக்கள் மீது சுமத்த இடமளிக்கப்படாது. தற்போது சில வகை எரிபொருட்களுக்கு வரி அறவீடு செய்யப்படுகின்றது. எனினும் இந்த வரித் தொகையினை இலங்கை பெற்றோலியக் வளக்கூட்டுத்தாபனமும் இந்தியன் ஒயில் நிறுவனமும் ஏற்றுக்கொள்ளும். வரி அறவீடு செய்யப்படுவதனால் லாபத்தில் ஒரு பகுதி குறையுமே தவிர அந்த சுமை மக்கள் மீது திணிக்கப்படாது.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் கடந்த நான்கு மாதங்களில் வரிச் செலுத்தியதன் பின்னர் 365 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் 665 பில்லியன் ரூபா கடன் ஒன்றினை செலுத்தி வருகின்றது. இதேபோன்று ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், முப்படைகள் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன பெற்றோலிய வளக் கூட்டுதாபனத்திற்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
|
|
|


