மக்களுக்கெதிரான ஆயுதப் படையினரின் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலியுறுத்தல்!

Thursday, October 27th, 2016

கடந்த வியாழக்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான சுகந்தராசா சுலக்சன், நடராசா கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமையைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்குச் சரியான நீதி விரைவாகக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்துச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவர்களின் இழப்பை  ஈடுசெய்யும் வகையில் அவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஸ்ட ஈடு வழங்கப்படவேண்டும். அத்துடன், ஆயுதப் படையினர் சாதாரண மக்களுக்கெதிராக எவ்வித ஈவிரக்கமுமின்றி மேற்கொள்கின்ற ஆயுதப் பிரயோகங்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன், மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Untitled-1 copy

Related posts:


சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது – அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்...
இவ்வருட விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் கடந்த 15 வருட கால வருமானத்தை விடவும் அதிகம் - ஏற்ற...
ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் - மக்களே அவதானம் என எச்சரி...