போலியோ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை – பிரதமர் ரணில்

Monday, May 30th, 2016

இலங்கையில் போலியோ அச்சுறுத்தல் இல்லை எனவும் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டில் போலியோ நோயாளிகள் எவரும் இணங்காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் இடம்பெற்று வரும் 107ஆவது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

1995ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து றோடரி இன்டர்நெசனல் உறுப்பினர்கள் சிலர் இலங்கை சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடினர்.

அவர்களது நோக்கம் தேசிய நோய்த்தடுப்பு தினத்தை ஏற்பாடு செய்வதே. இதன் நிமித்தம் ஒன்றரை மில்லியன் டொலர்களை இலங்கை்கு வழங்க முன்வந்தன. நாடுமுழுவதும் போலியோத் தடுப்பு ஊசியை அறிமுகப்படுத்த செலவாகும் மிகுதித் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த காலக்கட்டத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் நடைபெற்றதால், அந்தப் பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் குறித்த செயற்திட்டத்தை முன்னெடுக்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனர்.

எனினும் றோடரி அதற்கு இணங்கவில்லை, இதன் பொருட்டு றோடரி நிதி அளித்துள்ள நிலையில் அதனை நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டும் விநியோகிக்க இடமளிக்க முடியாது என குறிப்பிட்டார். இந்த நிலையில் இரண்டு மூன்று மாதங்களின் பின்னர் றோடரி தலைவர் ரவீந்திரன் விடுதலைப் புலிகள் அமைப்பினால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: