போரால் மூடப்பட்ட தொழிற்சாலை ஊழியருக்கு சேமலாப நிதிக் கொடுப்பனவு வடமாகாண தொழில் ஆணையாளர் தெரிவிப்பு!

போர்ச் சூழ்நிலைகளால் மூடப்பட்ட தொழில் நிலையங்களில் பணியாற்றிய பணியாளர்கள் தமக்குரிய ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவுகளை தொழில் திணைக்களத்துடன் தொடர்ப கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்று வடமாகாண தொழில் ஆணையாளர் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
வடக்கில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இந்த தொழில் நிலையங்களில் பணியாற்றியவர்கள் தமக்குரிய ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவை பெறத்தவறியவர்கள் தற்போது பெற்றுக்கொள்ள முடியும். சிலர் இந்தக் கொடுப்பனைவை பெறாத நிலையி;ல் உள்ளனர். தொழிலாளர்கள் தாம் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் ஊழியர் சேமலாப நிதித் திட்டத்தில் இணைந்திருந்தால் அவர்களின் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 55வயதான ஆண்களும் 50 வயதான பெண்களும் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். தொழில் நிலையங்களில் பணியாற்றிய சிலருக்கு இந்த ஊழியர் சேமலாப நிதிகழிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிந்திருக்காது. அசாதாரண சூழ்நிலையால் தொழில் நிலையங்கள் இடைநடுவில் மூடப்பட்டால், அந்தக் கொடுப்பனவு நிலுவையாக இருக்கும். தாம் கடமையாற்றிய தொழில் திணைக்களத்துக்கூடாக இந்த ஊழியர் சேமலாப நிதிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க முடியும்.- என்றார்.
Related posts:
|
|