போதையில் மோட்டார்சைக்கிள் ஓடியவருக்கு இரண்டு மாத சிறை!

மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் ஒருவருக்கு நேற்று (28.09.2016) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிசாரால் நேற்று முற்படுத்தப்பட்ட இவ்வழக்கில் இளைஞரிடமிருந்து மதுப்பரிசோதனையின் போது பெறப்பட்ட சுவாசப்பரிசோதனை குப்பி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த குற்றச்சாட்டை இளைஞர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றினால் 02 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவரை 7500 ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் அவருடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
Related posts:
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள வீதிகளைப் புனரமைக்க நடவடி...
அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையம்!
கடன்கள் தொடர்பிலான மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் - அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை...
|
|