போதனாசிரியர் வெற்றிட ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Thursday, November 10th, 2016

இலங்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் வடக்கு மாகாணத்திலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளைக் கற்பிக்கும் போதனாசிரியர்கள் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குடிசார் படவரை கலைஞர், மரவேலை தொழிநுட்பவியலாளர், அழகுக்கலை மற்றும் சிகையலங்கரிப்பவர், காய்ச்சி ஒட்டுபவர், விவசாய இயந்திர உபகரணங்கள் திருத்துநர், வெதுப்பக உற்பத்தியாளர், சமையலாளர், முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி, கட்டட நிர்மான உதவியாளர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் தோல் பொருள் உற்பத்தி, நீர்க்குழாய் பொருத்துனர், மின் இணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், டீசல் வாகன இயந்திரம் திருத்துநர்.

கல்வித் தகைமை

க.பொ.த சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் தமிழ் மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி வேண்டும். அத்துடன்,

தொழில் தகைமை

இலங்கை 3ஆம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஆங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / தொழிற் பயிற்சி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற தேசிய  தொழிற் தகைமை மட்டம் 05 அல்லது அதற்கு சமமான தகைமையை பெற்றிருத்தல். அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் குறித்த தொழிற் துறையில் டிப்ளோமா அல்லது பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்;துடன்,

அனுபவம்

குறித்த துறையில் ஆகக் குறைந்தது 01 வருட உள்நாடு அல்லது வெளிநாடு கற்பித்தல் அனுபவம் இருத்தல் வேண்டும். அத்துடன்,

வயதெல்லை

18 வயதிற்கு குறையாமல் 45 வயதிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் சுயவிவரக்கோவை மற்றும் சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து உதவிப் பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை 1ஆம் மாடி, வீரசிங்க மண்டபம், இல.12 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு எதிர்வரும் 30.11.2016அம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாணம் உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

app

Related posts: