போக்குவரத்து விதி மீறிய பெண்ணுக்கு அதிகூடிய தண்டம்!

போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்றுமுன்தினம் (22) தீர்ப்பளித்தார்.
சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை தடுக்கத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு அதி கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, ஆறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட குற்றப்பத்திரம் குறித்த பெண் ஓட்டுநருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.
Related posts:
மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
மீசாலையில் 22 பவுண் நகை கொள்ளை!
இந்திய வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!
|
|