போக்குவரத்து விதிகள் மீறலுக்கான தண்டனை அதிகரிப்பு நல்ல விடயம் – நியாயப்படுத்துகிறார் சுகாதார அமைச்சர் ராஜித!

Thursday, December 1st, 2016

போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டம் 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை மிகவும் நல்ல விடயம் என்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தின் போது பிரதான 7விதிகள் மீறப்படுவதற்கான தண்டனை அதிகரிப்பு தொடர்பான யோசனையை முதலில் நானே முன்வைத்தேன். நாட்டில் இடம்பெறும் விபத்துக்களினால் ஆண்டுதோறும் சுமார் 25ஆயிரம் பேர்வரை உயிரிழப்பதுடன் பலர் காயமடைகின்றனர். இவர்கள் தொடர்பான செலவினங்களை சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டியிருக்கின்றது. சரியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி செலுத்தப்படுகின்ற தனியார் பஸ்களினால் பாரியளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

rajitha2-720x480

Related posts: