பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு விளக்கமறியல்!
Friday, February 17th, 2017
மன்னார் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நபர் ஒருதொகை கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டிற்காக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் ரத்தோட பல்லேதென்ன பகுதியைச் சேர்ந்தர் என தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து மூன்றரை கிலோ கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
நாடு திரும்பினர் நேபாள ஜனாதிபதி !
ஊரடங்குச் சட்டம்: மீறிய 25031 பேர் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
கனகராயன் குளத்தில் அதிகாலை கோர விபத்து - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உ...
|
|
|


