பொலிஸாருக்கு கஞ்சா விற்ற நபர் கைது!

சிவிலுடையில் சென்ற பொலிஸாருக்கு கஞ்சாவை விற்பனை செய்த 39 வயதுடைய நபரைக் கடந்த புதன்கிழமை(10) இரவு யாழ். நிலாவரைப் பகுதியில் வைத்து அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர் ஊரெழு மேற்குச் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரிடமிருந்து 115 கிராம் கஞ்சாவினைத் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சம்பந்தனை கொலை செய்ய 25 மில்லியனில் கூலிப்படை: பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறையீடு!
மனித உரிமை மீறல்களில் மூன்று மாகாணங்கள் முன்னிலையில்!
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு திட்டம் - உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்க...
|
|