பொலிஸாரின் அதிரடி அறிவித்தல்!

குடாநாட்டில் தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு வேளைகளில் தெருக்களில் இளைஞர்களை ஒன்று கூட வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் குருநகர் பகுதிகளில் இளைஞர்கள் பொதுவாக தெருக்களில் நிற்பதாலும் போதைப் பொருள்பாவனை , மது பாவனை, அடிதடி சண்டைகள் இடம்பெற்று வருவதாலும் அப்பகுதிகளில் பொலிஸாரின் பார்வை அதிகமாகியுள்ளது.
இதன் காரணமாக பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகளும் ஏற்பட்டு வந்துள்ளது.குறித்த முரண்பாட்டிற்கு பின்னர் குருநகர் பகுதிகளில் உள்ள இளைஞர்களே வீதிகளில் நிற்காதீர்கள் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இரவு நேரங்களில் தெருக்களிலும்,தெருச்சந்திகளில் ஒன்று கூடும் இளைஞர்களை எச்சரித்ததுடன் சில இளைஞர்களை பொலிஸார் கைதும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச சேவையாளர்களுக்கு இன்றுமுதல் வேதன அதிகரிப்பு - நிதியமைச்சு தெரிவித்துள்ளது!
படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேம்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை!
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம்...
|
|