பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள இலங்கையர்களாக கைகோர்க்கவேண்டும் – நிதியமைச்சர்!
Sunday, January 1st, 2017
பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்காக அனைவரும் இலங்கையர்களாக கைகோர்க்கவேண்டும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைய புதிய பொருளாதார வேலைத்திட்டம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு வறுமையை ஒழிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஊழல் மற்றும் அடக்கு முறையில் இருந்தும் அதிக கடன் சுமையில் இருந்தும் தற்போது நாடு மீண்டு வருகின்றது. மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
யாழ். கொட்டடி பகுதியில் வாள்வெட்டு - தம்பதிகள் வைத்தியசாலையில் !
முல்லைத்தீவு கடலில் படியும் மர்மம் ? - சுனாமி ஆபத்தா?
வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!
|
|
|


