பொது இடத்தில் மதுபானம் அருந்திப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சந்தேகநபருக்கு அபராதமும் சமூதாய சீர்திருத்த உத்தரவும்
Thursday, May 26th, 2016
பொது இடத்தில் மதுபானம் அருந்திப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் மானிப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரொருவருக்கு 3500 ரூபா அபராதமும், 100 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தத்துக்கும் கட்டளை பிறப்பித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(23-05-2016) உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் சந்தேகநபரைப் பிணையில் விடுவித்ததுடன், வழக்கினை மீண்டும் யூலை மாதம்-24 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
Related posts:
பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி பெறுவதில் சிக்கலில்லை - முதல்வர் விக்கினேஸ்வரன்!
கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கடற்படையினர் நடவடிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்தவகை குருதிக்கும் தட்டுப்பாடு – குருதி வழங்கமாறு ...
|
|
|


