பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

தெல்லிப்பழை, யூனியன் கல்லூரிச் சந்தியில் நேற்று (29) மாலை கடற்படையின் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாகக் காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மல்லாகம், தபாற்கந்தோர் பகுதியைச் சேர்ந்த வள்ளியன் சற்குணராஜா (வயது 60) என்பவரே உயிரிழந்தார்.
துவிச்சக்கரவண்டியில் வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை, யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற கடற்படை பேருந்து மோதியது. படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
Related posts:
மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துங்கள் – பெற்றோருக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
திருக்கார்த்திகை திருநாள் !
இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ...
|
|