பேருந்து -முச்சக்கரவண்டி விபத்து – பேருந்து தீக்கிரை!
Friday, July 22nd, 2016
வாரியகொட பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து – முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பேருந்தை தீ வைத்துள்ளனர்.
எரிபொருள் நிரம்பு நிலையத்திலிருந்து பிரதான பாதைக்கு சென்ற முச்சக்கரவண்டி, வவுனியா – கொழும்பு தனியார் பேருந்துடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றதிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதேச வாசிகள் அவ்வழியில் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்த நிலமை பொலிஸாரின் தலையீட்டால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதுடன்,குறித்த பேருந்தின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



Related posts:
பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக கொடுகடன் உத்தரவாதம் - மத்திய வங்கி தீர்மானம் !
பி.சி.ஆர் இயந்திரங்களை உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|
|


