பேருந்து போக்குவரத்து மக்கள் மயப்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவு!

Tuesday, January 2nd, 2018

நாட்டில் பேருந்து போக்குவரத்துத் துறையை மக்கள் மயப்படுத்தி நேற்றுடன் 60 ஆண்டு பூர்த்தியாகிறது. நாட்டின் தனியார் துறையொன்றை அரசாங்கம் பொறுப்பேற்ற முதலாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

பஸ் போக்குவரத்துத்துறையை அரசாங்கம் பொறுப்பேற்றபோது பயணிகள் போக்குவரத்து சேவை 22ஆயிரம் மைல்களுக்கு விஸ்தரித்திருந்தது. அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இந்தத் துறையை மக்கள் மயப்படுத்தும் கருத்துத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். எனினும்இ அப்போதைய போக்குவரதது அமைச்சராக மைத்திரிபால சேனநாயக்க இதன் ஆரம்ப ஸ்தாபகராக விளங்குகின்றனார்.

பஸ் சேவையை மக்கள் மயப்படுத்தும் உத்தியோகபூர்வ வைபவம் 1958 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறறது.

76 தனியார் பஸ் நிறுவனங்களும் அவற்றிடம் இருந்த மூவாயிரம் பேருந்து வண்டிகளும் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பின்னரே பயணிகள் போக்குவரத்துச் சேவை இலங்கை போக்குவரத்து சேவையாக பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: