பேருந்து பின் சில்லுக்குள் அகப்பட்ட பெண் மரணம்!
Thursday, September 15th, 2016
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் வயோதிப மாது ஒருவர் பேருந்தின் பின் சில்லுக்குள் அகப்பட்டு மரண மடைந்துள்ளார்.
நேற்று புதன் கிழமை நண்பகல் பருத்தித்துறை நகரில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐயனார் கலட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இ.கிருஸ்ணலீலா (வயது 68) என்ற வயோதிப மாதுவே மரணமடைந்தவராவார்.
நேற்றுமுற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான வயோதிப மாது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துவண்டியை ஓட்டுநர் இயக்கிய வேளை விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பருத்தித்துறைப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.

Related posts:
குப்பிளான் வடக்கில் மிதிவெடி மீட்பு!
பெயார் வே விருதின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது!
உலக தரவரிசையில் இலங்கைக்கு 76 ஆவது இடம் - தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
|
|
|


