பேருந்து சேவை இல்லை: மாணவர்கள் பெரும் சிரமம்!

வடமராட்சி கிழக்கு பகுதி பருத்தித்துறைக்கு வரும் முதலாவது பேருந்துச் சேவை நடைபெறாததனால் மாணவர்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து பருத்தித்துறைக்கு முதலாவதாக பயணம் மேற்கொள்ளும் இ.போ.ச. பேருந்தில் மாணவர்களே அதிகமாக பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதனால் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் பலர் உறவினர்களின் உதவியுடன் பாடசாலைக்குச் சென்றனர்.
நீண்ட நேரமாக பேருந்து வராததால் காத்திருந்த மாணவர்கள் சிலர் உறவினர்களின் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு அவசரமாகச் சென்றபோது இடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் காயமடைந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
Related posts:
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு - குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார ...
தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தகவல்!
எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக் கொள்ளுங்ள் - சீன வர்த்தகர்களுக்கு ஜன...
|
|