பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!
Monday, October 11th, 2021
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு கிலோவின் விலை நள்ளிரவுமுதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையும் நேற்று நள்ளிரவு முதல் உயர்வடைந்துள்ளது. இந்த நிலையிலேயே பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயன்றவர் கைது!
பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட அனுமதி!
2 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்த...
|
|
|


