பெற்றோரின் கௌரவத்தை பாதிக்காது நடக்கவேண்டும் – கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Friday, November 4th, 2016

பிள்ளைகளின் தேவைக்காக பெற்றோர் பாடசாலைகளுக்கு வரும்போது பாடசாலை மற்றும் பெற்றோர்களின் கௌரவத்தை பாதிக்காதவாறு அதிபர்கள் நடந்து கொள்ள வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்தது.

கல்வி அமைச்சின் செயலாளரால் சகல பாடசாலை அதிபர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வரும் போதும் அணிந்திருக்கவேண்டிய ஆடைகள் குறித்து பாடசாலைகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் முகங்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து எமது அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பாடசாலைக்கு பெற்றோர்கள் வரும்போது பாடசாலை மற்றும் பெற்றோர்களின் கௌரவத்தை காக்கும் வகையில் ஒழுங்காக ஆடைகளை அணிந்த வருவதற்கும் உரிய கூட்டங்களில் கலந்த கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அளிக்குமாறும் அறியத்தருகின்றோம். அவர்களைப் பாடசாலையில் இருந்து வெளியேற்றாமலும் பாடசாலைக்கு வரும் பெற்றோர்களின் ஆடையணிகள் தொடர்பாக அவர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் பாடசாலை அறிவித்தல் பலகையில் அறிவித்தல் காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறியத்தருகின்றேன் – என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ministry_of_Education-------------------------------------

Related posts: